• Oct 26 2025

"காந்தாரா 2" பட ட்ரெய்லர் எப்போது தெரியுமா.? படக்குழு அதிரடியாக வெளியிட்ட ரிலீஸ் தேதி..

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

2022-ம் ஆண்டு வெளியாகி, ரசிகர்கள், விமர்சகர்கள், மற்றும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்ற படம் தான் காந்தாரா. அந்த படத்தின் தெய்வீக உணர்வும், கலாச்சாரக் கதையாடல்களும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.


இப்போது, அதன் இரண்டாம் பாகமான ‘காந்தாரா 2’ பெரும் எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வருகிறது. இந்நிலையில், ‘காந்தாரா 2’ படத்தின் ட்ரெய்லர் வருகின்ற 22ம் தேதி, நண்பகல் 12.45 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பு வெளிவந்த சில நிமிடங்களிலேயே சமூக வலைத்தளங்களில் #Kantara2Trailer எனும் ஹாஷ்டாக் ட்ரெண்டாக ஆரம்பித்துவிட்டது.


2022ம் ஆண்டு வெளியாகிய 'காந்தாரா', இந்திய திரையுலகில் மறக்க முடியாத ஓர் அடையாளமாக விளங்கியது. இந்நிலையில் "காந்தாரா 2" திரைப்படம் மக்கள் மனதை சிறப்பாக கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடிக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement