• Oct 09 2025

KPY பாலா மீது பாய்ந்த புகார்.! கமிஷனர் ஆபீஸில் அழுத்தம் கொடுத்தது யார் தெரியுமா?

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில்  காமெடியில் கலக்கிய KPY பாலா, இன்று தனது கடின விடாமுயற்சியின் காரணமாக வெள்ளித்திரையில் கால் பதித்துள்ளார்.  இவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் தான் காந்தி கண்ணாடி. இந்த படம்  நல்ல விமர்சனங்களை பெற்று வசூலிலும் சாதனை படைத்துள்ளது. 

இந்த திரைப்படத்தை செரீப் இயக்கி இருந்தார். இவருடன், நமீதா கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா உள்ளிட்டோர்  நடித்துள்ளனர்.  

சுமார் மூன்று கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், தற்போது ஐந்து கோடியை தாண்டி உள்ளதாக படக் குழுவினர்  தமது மகிழ்ச்சியை பகிர்ந்து இருந்தனர். 

இந்த நிலையில், கேபிஒய் பாலா மீது  புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதாவது காந்தி கண்ணாடி படத்தில் பிரதமர் மோடி தொடர்பில் இழிவான காட்சிகள்  மற்றும் வசனங்கள் இடம் பெற்று இருப்பதாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


இந்தப் புகாரை சிவநேச கட்சியை சார்ந்தவர்கள் கொடுத்துள்ளனர்.  மேலும்  இது போன்ற திரைப்படங்கள் மக்களின் மனநிலையை மாற்றும்  செயலை செய்வது கண்டிக்கத்தக்கது.

ஆகவே இந்த படத்தில் நடித்த பாலா மற்றும் பாலாஜி சக்திவேல், இயக்குனர் ஷெரீப் ஆகியோர் மீது  காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் சர்ச்சைக்குரிய காட்சிகள், பாடல் வரிகள் என்பவற்றை நீக்க வேண்டும் என புகார் கொடுத்தவர்கள் தெரிவித்துள்ளனர். 




Advertisement

Advertisement