• Jan 19 2025

வெற்றியோடு வந்த பாக்கியாவுக்கு வீடுதேடிவந்த பேரதிர்ச்சி! மீண்டும் கைநழுவும் காண்ட்ராக்ட்?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய நாளுக்கான எபிசோட்  வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம் வாங்க.

இன்றைய எபிசோட்டில் பாக்கியாவுக்கு பொருட்காட்சி நடக்க இருக்கும் தகவல் வர சந்தோஷமாகி விடுகிறார். அதையடுத்து நேராக ஜெனியை பார்க்க எழிலுடன் வருகிறார் பாக்கியா. அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்தாலும் ஜெனி வீட்டுக்குள் அழைத்து உட்கார சொல்கிறார்.

எனக்கு நடந்த எல்லா நல்லதுலையுமே நீ இருந்து இருக்க. இப்போ பொருட்காட்சி நடக்க இருக்கு. நீ என்கூட இருக்கணும்னு ஆசையா இருக்கு ஜெனி எனக் கேட்கிறார். ஜெனி அம்மா எதோ திட்ட வர அவரையும் அடக்கி விடுகிறார் ஜெனி. வருவியா எனக் கேட்டும் ஜெனி அமைதியாகவே இருக்கிறார்.

தொடர்ந்து எழில் பாக்கியாவை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு செல்கிறார். வீட்டில் இருப்பவர்கள் சந்தோஷத்தில் பாக்கியாவை பாராட்டிக்கொண்டு இருக்கின்றனர். அப்போ வீட்டுக்குள் வரும் கோபிக்கு பொருட்காட்சி நடக்க இருக்கும் விஷயம் தெரிந்து அதிர்ச்சி ஆகிவிடுகிறார். இதையடுத்து பூங்கொத்துடன் வீட்டுக்கு வருகிறார் செழியன்

அவர் வந்து பாக்கியாவிடம் பூவை கொடுத்து நீ பேச மாட்டேனு தெரியுமா. ஆனா இந்த விஷயம் எனக்கு சந்தோஷமா இருக்கு. எனக்கு பிள்ளை பிறந்தப்ப இருந்த சந்தோஷத்தை விட இது சந்தோஷமா இருக்கு. உனக்கு என்ன ஹெல்ப் வேணாலும் என்கிட்ட கேளுமா என்கிறார்.

அதைக்கேட்ட பாக்கியா சந்தோஷமாக பூங்கொத்தை வாங்கி கொள்கிறார். இதனால் செழியன் கண்ணீர் விட இருவருக்குள் ஒரு பாசமழை காட்சியே நடந்து விடுகிறது. இதையடுத்து பாக்கியாவை தேடி வரும் ஒரு ஆள் தான் கேண்டீன் நடத்தி வருவதாகவும் பொருட்காட்சி ஆர்டரை தந்தால் 2 லட்சத்து 50 ஆயிரம் தருவதாக கூறுகிறார்.

அதனைகேட்ட ஈஸ்வரி பாக்கியாவை அழைத்து கொண்டு உள்ளே சென்று நீ நிறைய செலவு பண்ணி இருக்க. இரண்டே முக்கா லட்சத்துக்கு கைமாத்தி விடு என்கிறார். இதை தொடர்ந்து வெளியில் வரும் பாக்கியா தான் பொருட்காட்சி கேண்டீனை கைமாத்தும் ஐடியா இல்லை எனக் கூறிவிடுவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

Advertisement

Advertisement