• Sep 19 2025

'மிராய்' படம் தியட்டரில வெறித்தனமா ஓடுது போலயே.. முதல் வார வசூலைப் பாருங்களேன்..!

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படும் படமென்றால் அது ‘மிராய்’ தான். நடிகர் தேஜா சஜ்ஜா கதாநாயகனாக நடித்து, கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், வெளியான முதல் வாரத்திலேயே ரூ.112.10 கோடிக்கும் அதிகமான வசூலை பதிவு செய்து, திரையுலகில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இன்று (19 செப்டம்பர் 2025), தயாரிப்பு நிறுவனம் இந்த தகவலை அதிகாரபூர்வமாக வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.


செப்டம்பர் 12, 2025 அன்று உலகமெங்கும் வெளியான ‘மிராய்’ திரைப்படம், தெலுங்கு சினிமாவில் புதிய முயற்சியாகவும், ஆக்ஷன் கலந்த Mass entertainer ஆகவும் அமைந்திருந்தது.

இயக்குநர் கார்த்திக் கட்டம்னேனி, திரைப்பயணத்தில் எப்போதும் புதிய கோணங்களில் சிந்திக்கின்றவர். இந்த முறையும், அவர் டெக்னிக்கலாகவும் கதையாக்கத்தில் புதிய முயற்சி மூலமும் ‘மிராய்’ படத்தை எடுத்துள்ளார். இந்நிலையில் தற்பொழுது வெளியான வசூல் விபரம் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement