• Mar 19 2026

வெளியானது 'Dune: Part 3' படத்தின் டிரெய்லர்.. ரசிகர்கள் இதை ஏன் மாஸ்டர் பீஸ் என்கிறார்கள்?

shali / 1 day ago

Advertisement

Listen News!

ஹாலிவுட் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் மிகப்பெரிய படைப்புகளில் ஒன்றான Dune: Part-3 திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் டெனிஸ் வில்லெனுவ் இயக்கியுள்ளார். 

முன்னதாக வெளிவந்த Dune தொடர் திரைப்படங்கள் உலகளவில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், அதன் மூன்றாம் பாகம் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.


இந்தப் படத்தில் திமோதி சாலமே மற்றும் ஜெண்டயா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களின் நடிப்பு, கதை சொல்லல் மற்றும் காட்சியமைப்பு ஆகியவை இந்தத் தொடரின் முக்கிய பலங்களாக இருந்து வருகின்றன. 

இந்நிலையில், சமீபத்தில் வெளியான டிரெய்லர், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதில் காணப்படும் காட்சிகள், பிரம்மாண்டமான செட் அமைப்புகள், விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் பின்னணி இசை ஆகியவை பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்கின்றன. 


Advertisement

Advertisement