• Mar 19 2026

கியாஸ் சிலிண்டருக்கு கிரீடம் வைத்து கொண்டாடிய சமீரா ரெட்டி.! வைரலாகும் வீடியோ

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழில் வெளியான 'வாரணம் ஆயிரம்' படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை சமீரா ரெட்டி, 2000களில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார். தனது முதல் பட வெற்றிக்குப் பிறகு, அசல், வெடி, வேட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் தனித்துவமான இடத்தை பெற்றார்.

2014ஆம் ஆண்டு தொழிலதிபர் அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் மரபு மிக்க மகாராஷ்டிரிய முறையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

திருமணத்திற்கு பின் சினிமாவிலிருந்து விலகி இருந்தாலும், சமீரா ரெட்டி சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது மும்பையில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் அவர், இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்.


இந்நிலையில், சமீபத்தில் ஏற்பட்ட கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டின் பின்னணியில், தனது வீட்டுக்கு கியாஸ் சிலிண்டர் வாங்கி வந்ததை அவர் வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளார்.

அதன்படி, வீட்டிற்கு வந்த சிலிண்டரை சிவப்பு கம்பளம் விரித்து உள்ளே கொண்டு செல்வது, அதற்கு கிரீடம் சூட்டுவது, பணத்தால் விசிறுவது, காபி கொடுத்து ‘விருந்தோம்பல்’ செய்வது போன்ற நகைச்சுவையான காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் அவரது இந்த நகைச்சுவை அணுகுமுறையை பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Advertisement