• Aug 13 2026

விரட்டி அடியுங்கள் – ஆர்த்தியின் இன்ஸ்டாகிராம் பதிவு ஏற்படுத்திய பரபரப்பு

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து விவகாரம் கடந்த சில காலமாக தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகிறது. 

இந்நிலையில், ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

அவர் வெளியிட்ட பதிவில், “உங்களை குணப்படுத்துகிறேன் என்று யாராவது சொன்னால் அவர்களை விரட்டி அடியுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த பதிவில் அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. ஆனால், ரசிகர்கள் பலர் இந்த பதிவு ரவி மோகனுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்பட்ட பாடகி கெனிஷாவை குறிப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து பெறும் முயற்சியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், கடந்த ஓராண்டாக இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


இதற்கிடையில், ஆர்த்தியை பிரிந்த பின்னர் ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் நெருக்கமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இருவரும் பொது நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்பட புரமோஷன் நிகழ்வுகளில் ஒன்றாக கலந்து கொண்டது மேலும் கவனம் பெற்றது.

ஆனால், சமீபத்தில் ரவி மோகனை விட்டு பிரிவதாக கெனிஷா அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, ரவி மோகன் அளித்த பேட்டியில், “நான் விவாகரத்து பெறும் வரை என்னுடைய நடிப்பில் படங்கள் வெளியாகாது” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விவாகரத்து வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ரவி மோகனுக்கு குழந்தைகளை சந்திக்க அனுமதி வழங்கியும், ஆர்த்திக்கு மாதம் 3 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த சூழ்நிலையில் ஆர்த்தியின் புதிய சமூக வலைதள பதிவு மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது பதிவு யாரை குறிக்கிறது என்பது குறித்து அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை

Advertisement

Advertisement