• Aug 13 2026

விஜயாவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்த மாமியார்.! சிறகடிக்க ஆசையில் புது ட்விஸ்ட்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரசிகர்களின் மனதை கவர்ந்த சிறகடிக்க ஆசை சீரியல், தற்போது பல்வேறு எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. 

ஒவ்வொரு நாளும் புதிய பிரச்சினைகள், உணர்ச்சிகரமான காட்சிகள் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் மாற்றங்கள் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன. 

இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரத்திற்கான புதிய  ப்ரோமோ வெளியாகி, அதில் இடம்பெற்றுள்ள காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

அதன்படி வெளியான புதிய ப்ரோமோவில், முத்துவின் பாட்டி வீட்டிற்கு வருகிறார். இதைப் பார்த்த மீனா உடனே பாட்டி எப்படி இருக்கீங்க.? என கேட்க, அவர் யாருமா நீ? என கேட்கிறார்.


இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஸ்ருதி, என்ன பாட்டி இப்படி கேக்கிறீங்க என கேட்க, அவரிடமும் நீ யார் என்று கேட்கிறார். பின்பு விஜயாவை பார்த்து நீ ரொம்ப உடம்பு வச்சிட்டா என்று சொல்லுகிறார்.

இதனால் எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். பின்பு தான் அண்ணாமலை அம்மாவுக்கு இப்போ நடந்த எதுவும் ஞாபகம் இல்லை என கூறுகிறார்.

இதனால் ஏற்கனவே இங்க ஏகப்பட்ட பிரச்சினை, இதுல இது வேறயா என விஜயா பெருமூச்சு விடுகிறார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ..

எனவே முத்து, மீனா மற்றும் குடும்ப உறுப்பினர்களைச் சுற்றி உருவாகியுள்ள இந்த புதிய சூழல்,  அடுத்ததாக சீரியலில் என்ன நடக்கப் போகிறது என்ற கேள்விகளை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement