• May 05 2026

டிராகன் பட ஓராண்டு கொண்டாட்டம்.! பிரதீப்புடன் கயாடு லோஹர் செய்த லூட்டிகள்.. BTS க்ளிக்ஸ்

shali / 2 months ago

Advertisement

Listen News!

‘டிராகன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான கயாடு லோஹர், குறுகிய காலத்திலேயே இளம் ரசிகர்களின் மனதில் தனித்த இடத்தைப் பிடித்துள்ளார். படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், படப்பிடிப்பு சமயத்தில் எடுத்த BTS புகைப்படங்களை தற்போது அவர் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.


2025 பிப்ரவரி 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான டிராகன், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்ததை முன்னிட்டு கயாடு லோஹர் படப்பிடிப்பு தருணங்களை நினைவுகூர்ந்து BTS புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களில் செட் பின்னணியில் நடந்த சிரிப்பூட்டும் தருணங்கள், படக்குழுவினருடன் எடுத்த செல்ஃபிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. 

இந்த படத்தில் ஹீரோவாக நடித்தவர் பிரதீப் ரங்கநாதன். அவருடன் கயாடு லோஹர் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இளம் தலைமுறையினருக்கான கதைக்களம், நகைச்சுவை மற்றும் உணர்ச்சி கலந்த காட்சிகள் மூலம் படம் பேசுபொருளாகியது. இந்தப் படத்தை இயக்கியவர் அஸ்வத் மாரிமுத்து என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், கயாடு வெளியிட்டுள்ள BTS புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான லைக்குகளைப் பெற்றுள்ளன. 

Advertisement

Advertisement