• May 18 2024

சன்டிவியை விட்டு கலைஞர் டிவிக்கு மாறிய நடிகை ராதிகா- அதுவும் எந்த சீரியலில் நடிக்கவுள்ளார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் பல சூப்பர் ஹிட்டான சீரியலை ஒளிபரப்பும் முக்கிய சீரியலாக சன்டிவி காணப்படுகின்றது. அந்த வகையில் இதில் பல வருடங்களாக தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் ஏகப்பட்ட சீரியல்கள் நடித்தும், தயாரித்தும் பிரபலமானவராக இருப்பவர் தான் ராதிகா சரத்குமார்.

இவர் வெள்ளித்திரையிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். அத்தோடு இவர் கடைசியாக சன் தொலைக்காட்சியில் சித்தி 2 என்னும் சீரியலை தயாரித்து நடித்தும் வந்தார்.

ஆனால் இடையில் திடீரென இனி நான் நடிப்பதை நிறுத்தியுள்ளேன் என அவர் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது ராதிகா கலைஞர் தொலைக்காட்சியில் புதிய சீரியல் தயாரிக்க இருக்கிறாராம்.

இந்த சீரியலுக்கு பொன்னி என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளதாம். மேலும் சன் தொலைக்காட்சியில் காலங் காலமாக சீரியல் தயாரித்து நடித்து வந்த ராதிகா இப்போது வேறொரு டிவிக்கு சென்றுள்ளதால் ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement