• Jan 18 2025

ஆர்.ஜே.பாலாஜியை பங்கமாக கலாய்த்த விஜே சித்து and அர்ஷித்... சிங்கப்பூர் சலூன் படத்தை ப்ரோமோஷன் பண்ணவே வேண்டாம் போங்கடா...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகி உள்ள சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தை ப்ரோமோஷன் செய்யும் வகையில் பிரபல யுடிப்பர்  விஜே சித்து மற்றும் அர்ஷித் ஆகியோர் அந்த திரைப்படத்தை கலகலப்பாக கலாய்ப்பது போல வீடியோ ஷேர் செய்துள்ளனர்.  


"சிங்கப்பூர் சலூன் படத்தோட ட்ரைலர் பார்க்கும் போது மீசையை முறுக்கு மாதிரியான படம் மாதிரி இருக்கு என்று விஜே சித்து சொல்ல  சிரித்து கொண்டே  அர்ஷித்  அதற்கு சொல்றாங்க  இல்லை இது கனா படம் மாதிரி இருக்கு ஒரு  உற்சாகத்தை கொடுக்கிற  படம் " இந்த உலகம் தோற்றவன் சொன்னா கேட்காது ஜெயித்தவன் சொன்னா தான் கேட்கும் எது பேசுறது என்றாலும் ஜெயித்திட்டு பேசு . என்று சொல்லி காட்டுகிறார் " 


அதற்கு விஜே சித்து mr . லோக்கல் படத்தில இருக்கிற ஒரு டயலாக் சொல்லுவாரு " எங்களை மாறி ஆட்கள் எல்லாம் ஒரு தடவை ஜெயித்தா போதாது ஒவ்வொரு தடவையும் ஜெயிக்கணும் . ஆக மொத்தத்தில இரண்டு சிவகார்த்திகேயன் படமும் கலந்து மிக்சில அடிச்ச படம் தான் சிங்கப்பூர் சலூன் .என்று சிரித்து கொண்டே ஆர்.ஜே.பாலாஜிடம் கேட்க . 


சிரித்து கொண்டு பாலாஜி சொல்கிறார். நீங்க ப்ரோமோஷனே பண்ண வேணாம்டா ட்ரைலர் பார்த்தவங்க கூட உங்க கதையால படம் பார்க்கமா போக போறாங்க . என்று மாறி மாறி மூன்று பேரும் கலாய்த்து கதைத்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .


Advertisement

Advertisement