• Jan 09 2026

அட்ஜஸ்ட்மென்ட்கு நான் ரெடி... ஆனா ஒரு கன்டிஷன்... சன் டிவி சீரியல் நடிகை அதிர்ச்சி பேட்டி...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியின் பாண்டவர் இல்லம் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து இருப்பவர் பாப்ரி கோஷ். அவர் தற்போது சன் டிவியின் ரஞ்சிதமே ஷோவில் கலந்துகொண்டு வருகிறார். அப்போது அட்ஜஸ்ட்மென்ட் தொடர்பாக அதிர்ச்சியான தகவல் ஒன்றை கூறியுள்ளார். 


பொதுவாக சினிமா துறையில் நடிகைகளிடம் வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய கேட்கும் விஷயம் அதிகம் இருக்கிறது. பல நடிகைகள் அதை பற்றி வெளிப்படையாகவும் புகார் கூறி இருக்கின்றனர். தற்போது அது பற்றி பாப்ரி கோஷ் பேசி இருக்கிறார். 


என்னிடம் யாராவது அட்ஜஸ்ட்மென்ட் கேட்டால் நான் முடியாது என உடனே சொல்ல மாட்டேன், நேராக அவரது வீட்டுக்கு சென்று மனைவி மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் அவருக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு வந்துவிடுவேன். அதற்கு பிறகு அவரது குடும்பத்தினர் அவரை பார்த்துக்கொள்வார்கள் என பாப்ரி கோஷ் தெரிவித்து இருக்கிறார். 

Advertisement

Advertisement