• Apr 26 2024

இயக்குநர் ஷங்கருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கின்றாரா?- அதிதி வெளியிட்ட கியூட்டான வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரமாண்ட திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குநர் தான் ஷங்கர். இவரது இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளதோடு வசூலிலும் அள்ளிக் குவித்துள்ளது. குறிப்பாக இவரது இயக்கத்தில் வெளியான இந்தியன் முதல்வன் எந்திரன் நண்பன் ஆகிய திரைப்படங்களைக் கூறலாம்.

அப்படி அவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் ரஜினியின் 2.0, இப்படம் பெரிய வசூல் வேட்டை நடத்தியது. இதனை அடுத்து தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து  Rc 12 என்ற படத்தையும் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 என்னும் திரைப்படத்தையும் இயக்கி வருகின்றார்.


இரண்டு படங்களின் படப்பிடிப்பும் விரைவாக நடைபெற்று வருகின்றது. மேலும் இயக்குநர் ஷங்கருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார். மகள் அதிதி ஷங்கர் சினிமாவில் விருமன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். நியூஇயர் ஸ்பெஷலாக அவர் குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார்.

அதில் ஷங்கரின் மகன் புகைப்படமும் இடம்பெற அட ஷங்கரின் மகனா இவர் நன்றாக வளர்ந்துவிட்டாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.அத்தோடு ஷங்கரின் மகள் அதிதி தற்பொழுது சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

























Advertisement

Advertisement

Advertisement