• Apr 05 2025

விஜயா காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட ரோகிணி..! எதிர்பாராத திருப்பத்துடன் சிறகடிக்க ஆசை!

subiththira / 18 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, பாட்டி ரோகிணியப் பாத்து இனிமேலாவது குடும்பத்தோட ஒன்னா சேர்ந்து வாழப் பழகு என்று சொல்லுறார். அதைக் கேட்ட அண்ணாமலை ரோகிணியைப் பாத்து மனோஜுக்கு உண்மையா இருக்கப் பழகு என்கிறார். அதனை அடுத்து விஜயா மீனாவப் பாத்து பெரிய பூசணிக்காயை கொண்டுவந்து ரோகிணிட தலையில போடு என்று சொல்லுறார். 

அதைத் தொடர்ந்து பாட்டி, இனிமேல் இந்தக் குடும்பத்தில எந்தப் பிரச்சனையும் செய்ய மாட்டேன் என்று ரோகிணிய சத்தியம் பண்ணச் சொல்லுறார். அதுக்கு விஜயா என்ன அத்த நீங்க அவள விரட்டுறத விட்டுட்டு சத்தியம் பண்ணி வாழச் சொல்லுறீங்க என்று கேக்கிறார். இதனை அடுத்து ரோகிணி இனிமேல் எந்தப் பொய்யும் சொல்லமாட்டேன் என்று சொல்லி சத்தியம் பண்ணுறாள்.


மேலும் ரோகிணிய விஜயாவோட காலில விழுந்து மன்னிப்புக் கேக்கச் சொல்லுறார் பாட்டி. பின் விஜயா ரோகிணிய மன்னிச்சு அவரை உள்ளே போகச் சொல்லுறார். அதனை அடுத்து ரோகிணி பொய் சொன்னதுக்கு ஆரம்ப புள்ளி நீதான் என பாட்டி விஜயாவுக்கு அட்வைஸ் பண்ணுறார். இதைக் கேட்ட விஜயா பாட்டி மீது கோபம் கொள்ளுறார்.

இதைத் தொடர்ந்து ரோகிணி மனோஜைப் பாத்து நீ ஏன் எதுவும் பேசாம இருக்கிற என்று கேக்கிறார். மேலும் தன்ன காப்பாத்தினதுக்கு நன்றி என்று மனோஜைப் பாத்து சொல்லுறார். இதைக் கேட்ட மனோஜ் நீ இப்ப கதைக்கிறது கூட உண்மையா என்று தெரியாம இருக்கு என்கிறார். அதனை அடுத்து முத்து பார்லர் அம்மா இப்பவும் பொய் தான் சொல்லுறாள் என மீனாவைப் பாத்துச் சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.


Advertisement

Advertisement