• Apr 15 2026

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அடுத்த போட்டியாளர்... யார் தெரியுமா ? BIGG BOSS NEWS

shali / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 96 நாட்களைக் கடந்து இன்னும் ஒரு வாரத்தில் இறுதி நிலையை எட்டவுள்ளது. இந்நிலையில் தற்போது மற்றுமொரு போட்டியாளர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். 


பிக் பாஸ் வீட்டில் இறுதியாக 16 லட்சம் பணத்துடன் பூர்ணிமா வெளியேறி இருந்தார். அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டிருந்தது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நாமினேட் ஆகாமல் நேரடியாக டிக்கெட் டு ஃபினாலேவை வென்று விஷ்ணு இறுதி வாரத்துக்குள் நுழைந்துவிட்டார்.


பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் நாமினேட் ஆன அர்ச்சனா, மணி, விசித்ரா, தினேஷ், விஜய் வர்மா மற்றும் மாயா ஆகியோரில் யார் இம்முறை வெளியேறுவார் என்பதை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துள்ளனர். அதன்படி, தற்போதுள்ள ஆறு பேரில் கிராண்ட் பினாலே வாரத்துக்குள் நான்கு பேர் மட்டுமே செல்ல முடியும் என்கிற நிலை உருவாகியுள்ளது. இதில் இந்த வாரமும் டபுள் எவிக்‌ஷன் இருக்கும் என கணிக்கப்படுகின்றது.


இந்நிலையில் போட்டியாளராக பங்கு பற்றிய விசித்ரா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் என்ற அதிகாரபூர்வனமா அறிவிப்பு கிடைத்துள்ளது. 

Advertisement

Advertisement