• Oct 19 2026

ஜெயிலர் 2 உடன் மோதி பலத்த அடிவாங்கியதா ரணபலி.. வெளியான பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகின் பிரபல நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான ‘ரணபலி’ திரைப்படத்தின் வசூல் விபரங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளன.

இயக்குநர் ராகுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் சுமார் 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், அக்டோபர் 16ஆம் திகதி ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு வெளியானது. திருமணத்துக்குப் பிறகு விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள திரைப்படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்ப்பு அதிகமாகக் காணப்பட்டது.

‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த ஜோடியின் திரைப்படம் வெளியாகியிருப்பது கூடுதல் கவனத்தைப் பெற்றது.

எனினும், ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்துடன் போட்டியிடும் சூழலில், ‘ரணபலி’ எதிர்பார்த்த வசூலைப் பெறுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. படத்துக்கு எதிராக எதிர்மறையான பிரசாரம் நடைபெறுவதாக விஜய் தேவரகொண்டா முன்னதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். இருப்பினும், தெலுங்கில் இப்படத்துக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சாக்னிக் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் முதல் மூன்று நாட்களில் இப்படம் 24.10 கோடி ரூபாய்  வசூலைப் பெற்றுள்ளது. உலகளவில் மொத்தமாக 36.90 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

சுமார் 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், அடுத்தடுத்த நாட்களில் வசூலை அதிகரிக்குமா என்பதே தற்போது திரையுலகினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement

Advertisement