• Oct 19 2026

வேறு வேலை இல்லையா? விமர்சனங்களுக்கு அனுபமா கொடுத்த நச் பதில்.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராகத் திகழ்பவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து வரும் இவர், சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றார். இந்நிலையில், விமர்சனங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தனக்கு வரும் கருத்துகள் குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்துகள் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளன.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அனுபமா பரமேஸ்வரன், திரைப்பட விமர்சனங்கள் தொடர்பாக தனது கருத்துகளை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார்.

ஒரு திரைப்படம் நன்றாக அமையவில்லை என்றால் அதுகுறித்த விமர்சனங்கள் வருவது முக்கியமானது என்றும், அவை ஆரோக்கியமான முறையில் முன்வைக்கப்படும் போது ஏற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால், வேண்டுமென்றே திட்டமிட்டு, பணம் பெற்றுக்கொண்டு விமர்சனம் செய்பவர்களுக்கு ஏன் பதிலளிக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும், சமூக வலைத்தளங்களில் வெளியாகும் அனைத்து விமர்சனங்களுக்கும் தன்னால் பதிலளித்துக்கொண்டிருக்க முடியாது என்றும் தெரிவித்தார். இதனைத் தனது திமிராக எடுத்துக்கொள்ளக் கூடாது எனக் குறிப்பிட்ட அவர், தனக்குப் பிடித்த பதிவுகளுக்கு விருப்பத்துடன் பதிலளிப்பதாகவும் கூறினார்.

அனைத்து பதிவுகளுக்கும் பதிலளித்தால் வேறு வேலை இல்லையா எனக் கேட்பவர்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தனக்கு ஓய்வு நேரம் இருந்தாலும், அது இல்லாததுபோல் ஏன் நடிக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார்.

அனுபமா பரமேஸ்வரனின் இந்த வெளிப்படையான கருத்துகள் தற்போது ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகின்றன.

Advertisement

Advertisement