இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் குறித்த செய்திகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளன. இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கு கலாநிதி மாறன் திருமணப் பத்திரிகை வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத், பிரபல தொழிலதிபர் கலாநிதி மாறனின் மகளும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளருமான காவ்யா மாறனைத் திருமணம் செய்யவுள்ளதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், நடிகை குட்டி பத்மினி மற்றும் நடிகர் Y.G. மகேந்திரன் ஆகியோர் நேர்காணல் ஒன்றில் அனிருத் – காவ்யா மாறன் திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்தத் திருமணம் குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கலாநிதி மாறன் தனது மகளின் திருமண ஏற்பாடுகளில் கவனம் செலுத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியைச் சந்தித்து அவர் திருமணப் பத்திரிகை வழங்கியதாகவும் செய்திகள் வெளியாகின.
தற்போது முதலமைச்சர் விஜய் மற்றும் மு.க. ஸ்டாலினுக்கும் திருமண அழைப்பிதழ் வழங்கப்பட்டதாகத் தகவல் பரவியுள்ளது.
மேலும், நவம்பர் 11ஆம் திகதி கிரீஸில் திருமணமும், நவம்பர் 14ஆம் திகதி சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பும் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், திருமணம் தொடர்பான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகியுள்ளதா என்பது தெளிவாகவில்லை.
Listen News!