• May 15 2025

இளம் இயக்குநர் அபிஷனுக்கு வலைவிரித்த இரண்டு சூப்பர் ஹீரோக்கள்..! யார் தெரியுமா..?

subiththira / 7 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகத்தில் திடீரென பேசப்படும் படங்களில் ஒன்று தான் ‘டூரிஸ்ட் பாமிலி’. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இந்த படத்திற்கு, தற்போது ரசிகர்களிடையே மட்டுமல்லாமல், சினிமா பிரமுகர்களிடையே கூட பெரும் வரவேற்பு கிடைத்து வருகின்றது. இந்தப் படம் தற்போது 50 கோடி ரூபாயைத் தாண்டிய வசூல் சாதனை செய்து, பலரின் பார்வையை தன் மீது திரும்ப வைத்துள்ளது.

இப்படத்தின் வெற்றி சினிமா ரசிகர்களை மட்டுமல்ல இரு முன்னணி ஹீரோக்களான சிம்பு மற்றும் தனுஷையும் உற்சாகப்படுத்தியுள்ளது என்பது தான் இப்போது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.


இப்படத்தை இயக்கிய இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் குறும்படங்களின் மூலமாக தனது பயணத்தை ஆரம்பித்து, குறைந்த பட்ஜெட்டில் படங்களை உருவாக்கியுள்ளார். ‘டூரிஸ்ட் பாமிலி’ திரைப்படம் தியட்டர்களில் தொடர்ச்சியாக ஹவுஸ் புல் ஆகியது மட்டுமல்ல, நல்ல விமர்சனங்களையும் பெற்றிருக்கின்றது. 

சிம்பு மற்றும் தனுஷ் இருவரும் இப்படம் பார்த்து பெருமையுடன் இயக்குநர் அபிஷனை நேரில் சந்தித்து பாராட்டியதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இந்த இரண்டு பெரிய ஹீரோக்களும் அவரிடம் படம் பண்ண ஆசைப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதனைக் கேட்ட சினிமா ரசிகர்கள் மிகவும் ஆச்சரியத்தோடும் ஆவலுடனும் அப்படத்திற்காக காத்திருக்கின்றனர்.



Advertisement

Advertisement