• Jul 22 2025

வெளியானது ‘ஜோரா கைய தட்டுங்க' படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ...! சந்தோசத்தில் ரசிகர்கள்..!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனித்துவமான நகைச்சுவைப் பாணியால் மக்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் நடிகர் யோகி பாபு. ‘கோலமாவு கோகிலா’, ‘மண்டேலா’, ‘பொம்மை நாயகி’ என தனிக் கதையின் நாயகனாகவும் தனது நகைச்சுவை தன்மையையும் இணைத்து ரசிகர்களின் இதயத்தை வென்றவர், இப்போது ‘ஜோரா கைய தட்டுங்க’ என்ற படத்தில் நடித்து இருக்கின்றார்.

இந்தப் படத்தில் யோகி பாபு ஹீரோவாக மட்டுமல்ல, கதையின் முக்கிய சுழற்சி புள்ளிகளுக்கு அடிப்படையாகவும் திகழ்கிறார். விநீஷ் மில்லினியம் என்ற புதிய இயக்குநர் இப்படத்தின் மூலம் அறிமுகமாகின்றார். இவர் தனது கதையில் நகைச்சுவையையும், சமூகநீதிக்கான செய்தியையும் ஒரு வித்தியாசமான கதாப்பாத்திரத்தின் வழியே கொண்டு வந்திருக்கிறார்.


வாமா எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஜாகிர் அலி தயாரித்துள்ள இந்தப் படம், குறைந்த பட்ஜெட்டில் உருவாகி இருந்தாலும், தரத்தில் எந்தவிதத்திலும் குறையாமல் உருவாக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் எஸ்.என். அருணகிரி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரது பின்னணி இசை மற்றும் பாடல்கள் சிறப்பாக அமைந்துள்ளன. 

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை, தமிழ் சினிமாவின் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டு, படக்குழுவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இதன் மூலம், யோகி பாபு மற்றும் இயக்குநருக்கு மிகப்பெரிய வரவேற்புக் கிடைத்தது. 

நாளை திரைப்படம் வெளியாகும் நிலையில், தற்பொழுது படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ யூடியூப்பில் வெளியாகியுள்ளது. அந்த காட்சியில் யோகி பாபு ஒரு சமூகவிரோத பிரச்சனையில் சிக்கி அதை எப்படிச் சமாளிக்கிறார் என்பதனை சுவாரஸ்யமாக காட்சியளிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ வெறும் 2 நிமிடங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.


Advertisement

Advertisement