• Nov 24 2024

'சரிகமப' நிகழ்ச்சியில் உள்ள ஈழத்துச் சிறுமி அசாணி யார் தெரியுமா..? இவருக்குள் இப்படி ஒரு சோகமா... கண் கலங்க வைத்த குடும்ப சூழ்நிலை..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழில் 'சரிகமப' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தற்போது சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் சீசன் 3-ஐ வெற்றிகரமாக ஒளிபரப்பி வருகிறது. 

குறித்த நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு வாரங்கள் கழித்து இலங்கையில் இருந்து அசாணி என்கிற ஒரு பெண் தற்போது பாட இந்த நிகழ்ச்சியில் பாடுவதற்காக வந்திருக்கிறார். அந்த சிறுமி தாமதமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்ததற்கான காரணமானது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 


அதாவது மெகா ஆடிஷனில் கலந்து கொள்ள பணம் கூட இல்லாமல் அசாணி என்கிற சிறுமி தவித்து வந்துள்ளார். இதனையடுத்து அந்தப் பெண்ணை ஊரில் உள்ள மக்கள் அனைவரும் பணம் கொடுத்து இந்த நிகழ்ச்சிக்கு செல்லுமாறு அனுப்பி வைத்திருக்கின்றனர். அவரும் இந்த நிகழ்ச்சியில் வந்து தற்போது கலந்து கொண்டு பாடத் தொடங்கி இருக்கிறார். 

இந்நிலையில் அசாணி என்ற இந்த சிறுமி யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது. அதாவது பெருந்தோட்ட தொழிலாளிகளான கனகராஜ் - சத்தியபவானி ஆகியோரின் செல்ல மகள் தான் இந்த அசானி. இவருக்குத் தற்போது 14வயது தான் ஆகின்றது.


இவர்களின் சொந்த ஊர் ராமேஸ்வரம் தான். அவர்கள் இலங்கை அகதிகளாக இடம்பெயர்ந்து தற்போது இலங்கையின் கண்டி பகுதியில் வறுமையான வாழ்க்கைச் சூழலில் வாழ்ந்து வருகிறார்கள். இதில் அசானியின் அப்பா, அம்மா, மூத்த சகோதரர் ஆகியோர் தேயிலை தோட்டத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.200க்கு வேலை செய்து வருகின்றனர். அதேபோன்று அசானியின் மற்றொரு சகோதரர் டீக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

அசாணி ரேடியோவில் ஒலிக்கும் பாடல்களைக் கேட்டுத்தான் பாடல்களை பாடப் பழகியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement