• May 09 2024

ரசிகர்களின் கனவு கன்னி... முதல் முறையாக கமல ஹாசனுடன் இணைய போகிறார்... யார் என்று தெரியுமா?

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின் தொடர்ந்து பல படங்களை கமிட் ஆகியுள்ளார். இதில் இந்தியன் 2, தக் லைப், கல்கி 2898 AD, அன்பு - அறிவு இயக்கும் கமல் 237வது படம் என பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார் கமல் ஹாசன். இதில் அவர் வில்லனாக நடிக்கும் திரைப்படம் தான் கல்கி 2898 AD.


கல்கி திரைப்படத்தில் ஹீரோவாக பிரபாஸ் நடிக்க நாக் அஸ்வின் இயக்குகிறார். இப்படத்தில் தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பாட்னி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இந்நிலையில், இந்த படத்தில் புதிதாக தென்னிந்திய சென்சேஷனல் நடிகை மிருணாள் தாகூர் நடிக்க கமிட்டாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.


சீதா ராமம், Hi நானா போன்ற படங்களில் நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளையடித்த நடிகை மிருணாள் தாகூர், கல்கி 2898 AD படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது.


இதுகுறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து வெளிவரவில்லை என்றாலும், விரைவில் வெளியாகும் என கூறுகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement