• Feb 22 2025

பவதா இறந்துட்டான்னு நான் அழுதுட்டு வீடியோ போட ஏலாது... இறந்துட்டா இந்த பக்கம் அழுதுட்டு அந்த பக்கம் நடிக்கணும்... நெட்டிசன்களுக்கு காட்டமாக பதிவிட்ட விலாசினி...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜாவின் மகள் பவதாரணி சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் காலமானார். அவரின் இறப்பு அவரின் குடும்பத்தினருக்கு மட்டுமன்றி சினிமா இசை உலகிற்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


பவதாரணியின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகிற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் உறவினர்கள், பிரபலங்கள் என அனைவரும் தங்களது இரங்கலை தெரிவித்திருந்தனர். அவரின் சகோதரி விலாசினி இறந்த செய்தி கேட்டு சில மணி நேரங்களில் தனது சகோதரியை இனி பார்க்கவே முடியாது என இரங்கல் தெரிவித்து கண்ணீர் மல்க வீடியோ பதிவிட்டிருந்தார்.


இந்நிலையில் தற்போது இன்னுமொரு வீடியோ பதிவிட்டுள்ளார் அதில் " நீங்க நல்ல டிராமா குயின் எப்படியெல்லாம் அழுதுட்டு வீடியோ போட்டிங்க என்று கமெட் செய்தவர்களுக்காக இந்த பதிவு எங்க குடும்பத்தில் ஈடு செய்ய முடியாத இழப்புதான். அதுக்காக அழுது புலம்பி சோசியல் மீடியால வீடியோ போடணும் என்று அவசியம் இல்ல ஏன்னா அது என்னோட குடும்ப பிரச்சினை.


இன்னொரு விஷயம் நான் மீடியால என்ட்டடைன் பண்ணுற இடத்துல இருக்கேன். ஆடணும் பாடணும் நடிக்கணும் ஷூட்டிங் இடத்துல யாரும் இறந்துட்டாலும் அந்த பீலிங்ஸ் ஒரு பக்கம் வச்சிட்டு இங்க சீன்ல நடிக்கணும். இத புரிஞ்சிக்காதவங்க புரிஞ்சிக்கோங்க என்று காட்டமாக பதிலளித்து வீடியோ ஷேர் செய்துள்ளார்.  

Advertisement

Advertisement