• Jan 18 2025

சிறகடிக்க ஆசை சீரியலின் கதாநாயகி மீனா யார் தெரியுமா?- இவருடைய முதல் சீரியல் இது தானா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் ஆரம்பித்த நாளிலிருந்து விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருப்பதோடு இதில் நடித்து வருபவர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் இருக்கின்றனர். எனவே கதாநாயகியாக மீனா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் குறித்தே தற்பொழுது பார்க்கலாம் வாங்க.

சீரியலில் மீனா என்று அழைக்கப்படும் இவரது இயற்பெயர் கோமதிப் ப்ரியா. இவர் 1993ம் ஆண்டு பெப்ரவரி 8ம் தேதி பிறந்திருக்கின்றார்.இவர் மதுரையில் பிறந்திருக்கின்றார். வேலைக்காக சென்னையில் இருக்கின்றார்.30 வயது கொண்ட இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருப்பதோடு பல ரீல்ஸ் வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றார்.


மேலும் இவருக்கு 2018ம் ஆண்டிலிருந்து தான் சீரியலில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.அதன்படி ஓவியா என்னும் சீரியலில் முதன் முறையாக நடித்திருந்தார். தொடர்ந்து பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய வேலைக்காரன் என்னும் சீரியலில் நடித்து ரசிகர்களின் ஆதரவையும் பெற்றார். இது தவிர தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றார்.


மேலும் இவருடைய பொழுது போக்கு என்றால் பாட்டு கேட்பது மற்றும் டான்ஸ் ஆடுவது தானாம். மேலும் இவர் தற்பொழுது சிறகடிக்க ஆசை என்னும் சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement