• Apr 27 2024

பொலிட்டிக்கல் ஜானரில் உருவாகும் படத்தில் யோகிபாபுவுடன் கூட்டணி அமைக்கும் செல்வராகவன்- அதுவும் யார் இயக்குகின்றார் தெரியுமா?

stella / 11 months ago

Advertisement

Listen News!

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி படங்கள் மூலம் இளம் ரசிகர்களின் பேவரைட் இயக்குநராக வலம் வந்தார் செல்வராகவன். அதன்பின்னர் தனுஷின் புதுப்பேட்டை, கார்த்தி நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் என வெரைட்டியாக படங்களை இயக்கி மாஸ் காட்டினார். தனுஷின் கேரியரில் மிக முக்கியமான பங்கு செல்வராகவனுக்கு உள்ளது. 

விரைவில் புதுப்பேட்டை 2 அல்லது ஆயிரத்தில் ஒருவன் 2 படங்களை செல்வராகவன் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் செல்வராகவன் அறிவித்திருந்தார். ஆனால், அவர் காமெடி நடிகர் யோகி பாபுவுடன் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது.

 இந்தப் படத்தில் செல்வராகவன் நடிகராகவே களமிறங்கவுள்ளார். அவருடன் யோகி பாபு, புஷ்பா பட பிரபலமான தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோரும் நடிக்கவுள்ளனர். மொமண்ட் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தை ரங்கநாதன் இயக்கவுள்ளார்.


அறிமுக இயக்குநரான ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் பொலிட்டிக்கல் ஜானரில் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படம் பொலிட்டிக்கல் ஜானரில் வெளியாகி தேசிய விருதையும் வென்றது. அதேபோல், செல்வராகவன் - யோகி பாபு இணையும் படமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் ஜூன் மாதம் தொடங்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement