• Jan 19 2025

தளபதி 69ல் கமிட்டாகியுள்ள பிரபலங்கள் யார் யார் தெரியுமா? தரமான சம்பவம்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

எச். வினோத் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிக்க உள்ள திரைப்படம் தான் தளபதி 69. இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படாத நிலையில் தளபதி 69 என வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கேவிஎன் ப்ரொடக்ஷன் தயாரிக்கின்றது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்ந்துவரும் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் கோட் திரைப்படம். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். தற்போது இந்த படம் வெளியாகி ஒரு மாதங்களைக் கடந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இன்னொரு பக்கம் இளைய தளபதி விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். 2026 ஆம் ஆண்டு தான் தமது இலக்கு அந்த ஆண்டு நடக்கவுள்ள சட்ட பேரவை தேர்தலில் போட்டியிடுவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் இந்த கட்சியின் முதல் மாநில மாநாடு விரைவில் நடக்க உள்ளது.


விஜய் இனிவரும் நாட்களில் அரசியலில் தான் முழு நேரமாக கவனத்தை செலுத்த உள்ளார். இதன் காரணத்தினாலே அவரது இறுதிப் படமான தளபதி 69 தமிழ் சினிமாவில் மறக்காத படமாக தான் இருக்கும் என்றும் அரசியல் கலந்த படமாக இருக்கும் என்றும் பேசப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், தளபதி 69 பட குழுவினர் புதிய அப்டேட் ஒன்றை  வெளியிட்டுள்ளனர். அதன்படி இந்த படத்தில் யார் யார் நடிக்கின்றார்கள் என்பது தொடர்பான அறிவிப்பு இன்று மாலை 5 மணி அளவில் இருந்து அடுத்த மூன்று நாட்களுக்குள் வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளது. 

இதே வேளை தளபதி 69 ஆவது படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement