• Apr 17 2026

விஜயகாந்த் இறுதியாக நடித்து ரிலீஸாகாத திரைப்படம் எது தெரியுமா?- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

ரசிகர்களால் கேப்டன் என்று அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாகவே இருந்தவர் அவர். ஈழ மக்களுக்காக நடிகர் சங்கம் சார்பில் முதன்முதலில் விஜயகாந்த்தான் உண்ணாவிரத போராட்டத்தை முன்னின்று நடத்தினார். 

அதேபோல் நடிகர் சங்க தலைவராக இருந்தும் ஏகப்பட்ட நல்ல காரியங்களை செய்திருக்கிறார். சினிமாவில் பீக்கில் இருந்தபோதே அவர் அரசியலிலும் நுழைந்து எதிர்க்கட்சி தலைவராக மாறினார். 


ஆனால் அடுத்தடுத்த தேர்தல்களில் அவருக்கு தோல்வியே கிடைத்தது. சூழல் இப்படி இருக்க திடீரென அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதை அடுத்து அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து முழு ஓய்வில் இருந்தார்.

இந்த சூழலில் சில நாட்களுக்கு முன்னதாக அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் ரசிகர்களும், தொண்டர்களும் கவலையடைந்தனர். அதனையடுத்து வீடு திரும்பிய அவர் மீண்டும் மருத்துவமனையில் நேற்று அட்மிட் ஆனார். 

இந்த முறையும் விஜயகாந்த் வீடு திரும்பிடுவார் என்று ரசிகர்களும், தொண்டர்களும் காத்திருந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு நாளை நடக்கவிருக்கிறது.இவரது மறைவிற்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் தமது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜயகாந்த் இறுதியாக நடித்த தமிழன் என்னும் படம் பாதியிலேயே டிராப் ஆனது.டிராப் ஆன அந்த படத்தின் படப்பிடிப்பு தள வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement