• Nov 22 2024

அண்ணே மன்னிச்சிடுங்க, வெளிநாட்டில இருக்கிறது என்னோட தப்பு தான்,- விஜயகாந்திற்காக கதறி அழும் நடிகர் விஷால்- வெளியாகிய வீடியோ

stella / 10 months ago

Advertisement

Listen News!


திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாகவே இருந்தவர் நடிகர் விஜயகாந்த். நடிகர் சங்க தலைவராக இருந்தும் ஏகப்பட்ட நல்ல காரியங்களை செய்திருக்கிறார். சினிமாவில் பீக்கில் இருந்தபோதே அவர் அரசியலிலும் நுழைந்து எதிர்க்கட்சி தலைவராக மாறினார். 

ஆனால் அடுத்தடுத்த தேர்தல்களில் அவருக்கு தோல்வியே கிடைத்தது. திடீரென அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதை அடுத்து அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து முழு ஓய்வில் இருந்தார். சில நாட்களுக்கு முன்னதாக அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 


இதனால் ரசிகர்களும், தொண்டர்களும் கவலையடைந்தனர். அதனையடுத்து வீடு திரும்பிய அவர் மீண்டும் மருத்துவமனையில் நேற்று அட்மிட் ஆனார். 

இந்த முறையும் விஜயகாந்த் வீடு திரும்பிடுவார் என்று ரசிகர்களும், தொண்டர்களும் காத்திருந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு நாளை நடக்கவிருக்கிறது.


இவரது மறைவிற்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் தமது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் நடிகர் விஷால் அழுத படி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அண்ணே மன்னிச்சிடுங்க, இந்த நேரம் நான் அங்க உங்க பக்கத்துல இருந்திருக்கணும். எனக்கு இப்படியெல்லாம் ஆகும்னு தெரியாது, வெளிநாட்டுக்கு வந்தது என் தப்பு தான் மன்னிச்சிடுங்க அண்ணே என கதறியபடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பல பேருக்கு உதவி செய்திருக்கீங்க, உங்க கட்சி ஆபிஸுக்கு பசியோட யார் வந்தாலும் சாப்பாடு போடுவீங்கன்னு பல வருஷத்துக்கு முன்னாடியே கேள்விப்பட்டிருக்கேன். நடிகர் சங்கத் தலைவராக நீங்க இருந்து எப்படி செயல்பட்டீங்களோ அதே போல செயல்படவே நானும் ஆசைப்பட்டேன். உங்களை போலவே என்னால முடிஞ்ச உதவியை நானும் சில பேருக்கு செய்வதற்கு இன்ஸ்பிரேஷனே நீங்க தான் அண்ணே.. உங்களை கடைசியா பார்க்க முடியலையேன்னு ரொம்ப வருத்தமா இருக்கு, உங்க ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கிறேன் என உருக்கத்துடன் கண்ணீர் மல்க பேசிய வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.



Advertisement

Advertisement