• May 29 2023

ஒளிபரப்பாகவுள்ளது விஜய் டெலிவிஷன் விருது விழா... எப்போ தெரியுமா...? யார் யாருக்கு என்ன விருது கொடுத்திருப்பாங்க... லிஸ்ட் இதோ..!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டெலிவிஷன் விருது விழா ஆனது ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது வழமை. இதன் 8ஆவது விருது விழா ஆனது சில நாட்களுக்கு முன்னர் பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது.


இதன் ஒளிபரப்பானது வரும் ஞாயிறு அதாவது மே 14 மற்றும் 21 ம் தேதி மதியம் 3 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த விருது விழாவில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகிறது. அதுமட்டுமல்லாது முப்பதுக்கும் அதிகமான விருதுகளுடன் இந்நிகழ்வு மூன்றரை மணிநேரம் ஒளிபரப்பப்படும். மேலும் மா கா பா ஆனந்த், பிரியங்கா தேஷ்பாண்டே, ஈரோடு மகேஷ் மற்றும் நட்சத்திரா ஆகியோர் இந்த விருது வழங்கும் விழாவை தொகுத்து வழங்குகிறார்கள்.


இந்நிலையில் விருது பெற்றுக் கொண்டோர் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அந்தவகையில் பாக்கியலட்சுமி சீரியலுக்காக சிறந்த கதாநாயகி சுசித்ரா (பாக்யா), பாண்டியன் ஸ்டோர்ஸுக்காக சிறந்த ஹீரோ வெங்கட் (ஜீவா), சிறந்த வில்லன் ரேஷ்மா (ராதிகா), சிறந்த நகைச்சுவைக்கு – குரேஷி ஆகியோருக்கும் வழங்கப்பட்டது. 


அத்தோடு 15 ஆண்டுகள் சாதனை விருது ஈரோடு மகேஷ், சிறந்த தொகுப்பாளர்கள் மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே, பிரபல ‘ஜோடி’ விருது ராமர் மற்றும் மதுரை முத்து, சிறந்த கதாபாத்திர ஜோடி சித்தார்த் & கேப்ரியல்லா (ஈரமான ரோஜாவே), சிறந்த இயக்குநர் (மறைந்த) திரு. தாய் செல்வம் (ஈரமாான ரோஜாவே 1 & 2), சிறந்த கேம் ஷோ ‘அண்டாகாகசம்’, இந்த ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பு ஸ்வாதி கொண்டே, சிறந்த கண்டுபிடிப்பு ஷிவின் (பிக்பாஸ்) எனப் பல விருதுகள் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement