• Jun 04 2023

நடிகர் ரோபோ ஷங்கரின் மனைவியின் அம்மாவைப் பார்த்திருக்கின்றீர்களா?- உருக்கத்துடன் அவரே வெளியிட்ட போட்டோ

stella / 3 weeks ago

Advertisement

Listen News!


அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனாக அறியப்பட்ட ரோபோ சங்கரை, மிகவும் பிரபலமாக்கியது என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தான். 

இவர் தன்னுடையை தனித்துவமான காமெடி மூலம் ரசிகர்களை சிரிக்க வைப்பது மட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கார்த்தி, சிவாஜி கணேசன் போன்ற பல முன்னணி நடிகர்களின் குரல்களில் மிமிக்கிரி செய்து அசத்துவார்.


விஜய் டிவியில் இவருடைய காமெடிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, வெள்ளித்திரையில் காமெடி நடிகராக அறிமுகமானார்.தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து அசத்தி வந்தார்.


இவரைத் தொடர்ந்து இவருடைய மகள் மற்றும் மனைவி இருவருமே தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் அவ்வபோது தலை காட்டி வருகின்றனர்.இது ஒரு புறம் இருக்க ரோபோ ஷங்கர் திடீரென உடல் எடை குறைந்து நோய்வாய்ப்பட்டவர் போல இருக்கின்றார். இதனால் இவருக்கு என்ன ஆச்சு என்று ரசிகர்கள் கேட்டு வருவதும் உண்டு.


இருப்பினும் இது குறித்த சரியான விளக்கம் இன்னும் கிடைக்கவில்லை. அத்தோடு ரோபோ ஷங்கர் நலமாக இருப்பதாகவே அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தும் வருகின்றனர். இப்படியான நிலையில் ரோபோ ஷங்கரின் மனைவி கொரோனா காலத்தில் இறந்த தனது அம்மா இறந்து மூன்று வருடங்கள் ஆகி விட்டதாகவும் அவரது நினைவு நாள் என்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement