• Apr 26 2024

வாத்தி இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?- வீடியோ மூலம் அறிவிப்பு வெளியிட்ட பிரபல நிறுவனம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.இந்தப் படத்தில் தனுஷ் பாலமுருகன் என்ற கதாபாத்திரத்தில் வாத்தியாராக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார்.இவர்களுடன்  சமுத்திரக்கனி, தனிகெல்லா பரணி, சாய்குமார், தோட்டாபல்லி மது, ஹைபர் ஆதி, ஆடுகளம் நரேன், இளவரசு, ராஜேந்திரன், ஹரீஷ் பேரடி, ப்ரவீனா ஆகிய பலர் நடித்துள்ளனர்.

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு  ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கின்றார். இப்படம் வருகிற பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாத்தி படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.


இந்த நிலையில், வாத்தி படத்தின் இசை வெளியீடு குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி வரும் 4 ஆம் தேதி வாத்தி இசை வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது. அதுவும் சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடக்க இருப்பதாக வீடியோ வெளியிட்டு சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.

தனுஷின் வாத்தி படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தப் படம் மட்டுமின்றி, அஜித் நடிக்கும் AK62, ஆர்யன், சந்திரமுகி 2, இறைவன், இருகப்பற்று, ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மாமன்னன், லைகா புரோடக்‌ஷன்ஸ் நம்பர் 18, லைகா புரோடக்‌ஷன்ஸ் நம்பர் 20, லைகா புரோடக்‌ஷன்ஸ் நம்பர் 24, ரிவால்வர் ரீட்டா, தலைக்கூதல் என்று ஏராளமான படங்களை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement