• Mar 26 2023

பிரமாண்டமாக நடந்த தளபதி 67 படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

stella / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் 2ஆவது படம் தளபதி67.இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் லலித் குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். பிலோமின் ராஜ் இந்தப் படத்தை எடிட் செய்கிறார். இதெல்லாம் ஏற்கனவே வெளி வந்த அதிகாரப்பூர்வ தகவல்.


இதே போன்று இந்தப் படத்தில், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மன்சூல் அலிகான், மிஷ்கின், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் ஆகியோர் நடிப்பதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மற்ற நடிகர், நடிகைகள் குறித்து அறிவிப்பு இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.


சென்னை மற்றும் மூணாறு ஆகிய பகுதிகளில் தளபதி67 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து, 2ஆம் கட்ட படப்பிடிப்பு ஜம்மு காஷ்மீரில் இன்று தொடங்கியுள்ளது. இதற்காக 180 பேர் கொண்ட படக்குழுவினர் தனி விமானம் மூலம் காஷ்மீர் சென்றுள்ளனர். அங்கு, பாடல் காட்சிகள், சண்டைக் காட்சிகள் நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.


இந்த நிலையில் இப்படத்தின் பூஜை கடந்த சில மாதங்களுக்கு முதல் நடைபெற்றது.இந்த நிலையில் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement