• Jun 17 2026

‘மார்கன்’ படத்தின் ‘செப்பம்மா..' பாடல் வெளியீடு! எப்போது தெரியுமா.? படக்குழுவின் அப்டேட்!

shali / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி மார்க்கெட் உருவாக்கியுள்ள நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, தற்போது நடித்து வரும் புதிய திரைப்படம் தான் ‘மார்கன்’. இந்த படத்தின் மூலம் ரசிகர்களை மீண்டும் திரையில் கவர இருக்கின்றார்.


இப்படத்தை இயக்கியுள்ளவர் லியோ ஜான் பால், இவர் முன்பு எடிட்டராகவும் இருந்தவர். அவருடைய பாணி, கதை சொல்லும் திறன், மற்றும் அனுபவம் கொண்ட விஜய் ஆண்டனியின் நடிப்பு என அனைத்தும் சேர்ந்து, ‘மார்கன்’ திரைப்படம் 2025-இன் சிறப்பான வெளியீடாக பார்க்கப்படுகின்றது.

படத்தின் புரொமோஷனில் முக்கியமான அம்சமாக இருக்கக்கூடிய ‘செப்பம்மா’ எனும் பாடல் இன்று ஜூன் 13, மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனை  அழுத்தமான உணர்வுடன் எழுதப்பட்ட பாடலாகவும், விஜய் ஆண்டனியின் கரிசனமான நடிப்பை வெளிப்படுத்தும் விஷுவலாகவும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


படக்குழுவின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, ‘மார்கன்’ திரைப்படம் ஜூன் 27, 2025 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. ‘பிச்சைக்காரன் 2’ படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி ஒரு வித்தியாசமான கதையுடன் திரும்ப வருவதாகவும், இது முழு உணர்ச்சி பூர்வத்துடன் கூடிய திரைப்படமாக இருக்கும் என வலியுறுத்தப்படுகின்றது.

Advertisement

Advertisement