• Aug 18 2025

கொளுத்துங்கப்பா வெடிய! ஜூன் மாதத்தை தெறிக்கவிடும் 3படங்கள்.. கொண்டாட ரெடியாகும் ரசிகர்கள்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

ரசிகர்களின் மனங்களைக் கவரும் வகையில், இந்த ஜூன் மாதம் தமிழ் சினிமா உலகத்தில் சிறப்பான அதிர்வலையை உருவாக்கியுள்ளது. விஜய், நெல்சன், ஆர்.ஜே. பாலாஜி என அனைத்து முன்னணி பிரமுகர்களின் பிறந்தநாள், புதிய அப்டேட்கள், டீசர்கள் மற்றும் முக்கிய வெளியீடுகள் ஒன்று சேர்ந்து ஜூன் மாதத்தை திருவிழா போல மாற்றியுள்ளது.


ஜூன் 20ம் தேதி RJ பாலாஜியின் பிறந்தநாள். ஆனால் இந்த வருடம் அது அவருக்கான பிரத்தியேக கொண்டாட்டமாக இல்லாது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஏனெனில், சூர்யா நடிப்பில் உருவாகும் 'சூர்யா 46' படத்தின் அதிகாரபூர்வ டீசர் அதே நாளில் வெளியாகிறது.

அத்துடன் ‘கோலமாவு கோகிலா’ முதல் ‘ஜெயிலர்’ வரை ஸ்டைலிஷ் படங்களை உருவாக்கி வந்த இயக்குநர் நெல்சன் திலிப்குமார் ஜூன் 21ம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதேநேரம், அவரது இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ பற்றிய அப்டேட் வெளியாகும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ் சினிமாவின் சக்தி மையமான தளபதி விஜயின் பிறந்த நாளன்று ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ‘க்ளிம்ப்ஸ்’ வீடியோ வெளியாகவுள்ளது. விஜயின் அரசியல் படமாக கருதப்படும் இந்தப் படத்தில் அவர் மிக வித்தியாசமான லுக் மற்றும் கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் இதைப் பார்ப்பதற்கு ஆர்வமாக உள்ளனர். இவ்வாறாக ஜூன் மாதம் கொண்டாட்டமாகவே மாறியுள்ளது.

Advertisement

Advertisement