• Jul 22 2026

மழை பிடிக்காத மனிதன் எப்போ வாரார் தெரியுமா? வெளியான அறிவிப்பு

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும், சிறந்த இசை அமைப்பாளராகவும்  திகழ்பவர் தான் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் தான் மழை பிடிக்காத மனிதன்.

இந்த படத்தை பிரபல இயக்குனர் விஜய் மில்டன் இயக்கி உள்ளார். இதில் விஜய் ஆண்டனி உடன் மேகா ஆகாஷ், சத்யராஜ், சரத்குமார் மற்றும் சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகியுள்ளதோடு இந்த படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி இருந்தன .


இந்தப் படத்தின் பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று யூடியூபில் 30 லட்சத்துக்கும் மேல் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

இந்த நிலையில், மழை பிடிக்காத மனிதன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அதன்படி, இந்த படம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி வெளியாக உள்ளது. மேலும் இது விஜய் ஆண்டனிக்கு வெற்றி படமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement