தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும் மூத்த நடிகரான ஜெயராம், தனது நையாண்டி மற்றும் அழுத்தமான காமெடி நடிப்பால் ரசிகர்களை வியக்க வைத்தவர். சமீபகாலமாக மலையாளம், தமிழ் எனப் பல மொழிகளில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் ஜெயராம் உலக நாயகன் கமல்ஹாசனின் குரலை நக்கலடித்து மிமிக்கிரி செய்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி, ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பேட்டியில் கலந்து கொண்ட ஜெயராம், கேள்விகளுக்கிடையில் தனது மிமிக்ரி திறமையை சற்றும் இழந்ததில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், கமல்ஹாசனின் சொற்பொழிவை நக்கல் செய்து கதைத்திருந்தார். இந்தப் பேச்சு அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மேலும் அதனைப் பார்த்த கமல் எதுவும் கதைக்காது பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். ஜெயராமின் இந்த மிமிக்கிரி தற்போது சமூக வலைத்தளங்களில் வெகுவாகப் பரவி, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.
Listen News!