சமீபத்தில் வெளியான "இட்லி கடை" திரைப்படப் பாடல் வெளியான சில நாட்களிலேயே மில்லியன் கணக்கில் பார்வைகளை கடந்திருக்கிறது. ரசிகர்களின் மனதை கவர்ந்த இந்த பாடல், சமூக வலைத்தளங்களில் வைரலாகி, யூடூப் டிரெண்டிங்கிலும் இடம்பிடித்துள்ளது. இந்த ஹிட் பாடலின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார். எப்போதும் மெலோடியும், மாஸ் பாடல்களும் கலந்த இசையமைப்பை வழங்கும் அவர், இந்த முறை மீண்டும் ஒரு மாறாத ஹிட் வழங்கியுள்ளார்.
படத்தின் இசை மற்றும் பாடல்களின் பரபரப்பை கட்டியெழுப்பும் வகையில், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 13ஆம் தேதி, சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதில் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இசை ரசிகர்கள் என பலர் கலந்துக்கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்த இசை விழா, ரசிகர்களுக்கு ஒரு இசை விருந்தாக அமைய இருக்கிறது.
Listen News!