• Aug 29 2025

சினிமாத்துறைக்குள் காலடி வைக்கும் இன்பநிதி...! இயக்குநர் யார் தெரியுமா?

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழகத்தில் அரசியலும் சினிமாவும் நெருக்கமாக இணைந்திருக்கும் சூழலில், உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி தற்போது கவனம் பெறுகிறார். தற்போது UK உயர்கல்வி பயின்றுவரும் இன்பநிதி, படிப்பை முடித்தவுடன் தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் அடையாளம் ஏற்படுத்த இருக்கிறார்.


சமீபத்தில் வெளியான தகவலின்படி, விரைவில் இயக்குநர்  மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு இன்பநிதிக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. சமூகநீதி சார்ந்த கதைகளை தெரிவு செய்து வெற்றியை கண்டுள்ள  மாரி செல்வராஜ் , இப்போது இன்பநிதியை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் உள்ளதாக திரையுலகத்தில் பேசப்படுகிறது.


இது ஒரு முக்கியமான மாற்றம் என சொல்லப்படுகிறது. அரசியல் குடும்பத்தில் பிறந்தாலும், இன்பநிதி நேரடியாக அரசியலுக்கு வராமல், தனது சொந்த முயற்சியால் சினிமா துறையில் ஒரு பாதை அமைக்க முயற்சிப்பது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


Advertisement

Advertisement