• Jan 19 2025

சிவகார்த்திகேயனை சந்தித்த ப்ராவோ... என்ன சொன்னார் தெரியுமா?... இதோ வைரல் வீடியோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வயில் கார்ட் போட்டியாளராக பங்கு பற்றி இருந்த ப்ராவோ பிக் பாஸ் வீட்டில் இருந்து சிலநாட்களில் வெளியாகி இருந்தார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்த ப்ராவோ அவருடன் கலகலப்பாக பேசிய விடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.  


பிக் பாஸ் வீட்டில் இருந்தே வெளியேறிய ப்ராவோ தான் நண்பர்களுடன் வைப் பண்ணும் விடீயோக்களையும், போட்டோ சூட் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுடன் இருக்கும் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவில் அயலான் ரிலீஸ் ஆகா போகுது உங்களுடைய ரசிகர்களுக்கு என்ன சொல்ல போறீங்க என்று கேட்டிருந்தார் ப்ராவோ.     


அதற்கு சிவகார்த்திகேயன் ஜனவரி 12 அயலான் ரிலீஸ் ஆகுது எல்லாரும் போயிட்டு பாருங்க, ஒரு பிரண்ட்லி ஏலியன் வெய்ட் பண்ணிட்டு இருக்கு கட்டாயம் பாருங்க என்று கூறியுள்ளார். தமிழின் திறமான ஐ(f)பை இருக்கு என்றும் கூறியுள்ளார். 


இந்த விடியோவை ஷேர் செய்த ப்ராவோ (இங்கே துபாயில் அயலான் டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு சிவகேத்திகேயன் வந்திருந்தார். 2018 இல் நடந்த REMO ஆடியோ வெளியீட்டின் போது ஒரு மறக்கமுடியாத தருணத்தைப் பகிர்ந்துகொண்டோம், அங்கு அவர் எங்களின் கடந்தகால சந்திப்புகளில் இருந்து என்னை இனிமையாக ஒப்புக்கொண்டார். நேற்று, அவர் என்னை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரிடம் அன்புடன் அறிமுகப்படுத்தினார், இந்த நம்பமுடியாத மனிதர் மீது என் பாசத்தையும் மரியாதையையும் ஆழப்படுத்தினார்) என்று பதிவு செய்துள்ளார். 

இதோ அந்த வீடியோ... 

Advertisement

Advertisement