நடிகர் அஜித் குமார் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சர்வதேச கார் ரேஸ்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சினிமாவிலிருந்து சிறிது இடைவெளி எடுத்துள்ள அவர், தனது நீண்டநாள் ஆசையான மோட்டார் ஸ்போர்ட்ஸில் கவனம் செலுத்தி வருவது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. இருப்பினும், அவர் எப்போது மீண்டும் திரையில் கதாநாயகனாக வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே தொடர்ந்து நிலவி வருகிறது.

இந்த நிலையில், அஜித் குமார் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “Ajithkumar Sports Service LLC” என்ற பெயரில் இந்த நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு திரைத்துறையிலும், ரசிகர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிறுவனம் தொடங்கப்பட்டதற்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. சிலர், அஜித் மீண்டும் சினிமாவிற்கு திரும்பும் வகையில் தனது படங்களை தானே தயாரிக்க திட்டமிட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர். அதே சமயம், அவர் தற்போது ஈடுபட்டு வரும் கார் ரேஸிங் பயணத்தை ஆவணப்படமாக உருவாக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால், அந்த ஆவணப்படத்தை திரைப்படமாக வெளியிடும் நோக்கில் இந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் பரவி வருகிறது. தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை ரசிகர்களுடன் பகிர வேண்டும் என்ற எண்ணமே இதற்குப் பின்னால் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
Listen News!