• Dec 03 2024

பிக்பாஸ் வீட்டை விட்டு இறுதியாக வெளியேறிய கானாபாலா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?- ஒரு நாளைக்கு இத்தனை ஆயிரம் ரூபாவா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் சில போட்டியாளர்கள் எதார்த்தமாக விளையாடி வந்தாலும், மாயா பூர்ணிமா விஷ்ணு மற்றும் ரெக்கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட பிரதீப் வரை சிலர் ஏதேனும் ஸ்டாட்டர்ஜியை கையாண்டு விளையாடி வருகிறார்கள்.

மேலும் எந்த சீசனிலும் இல்லாத விதமாக இந்த சீசனில் 5 பேர் ஒரே நாளில்  வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்தார்கள்.அவர்கள் வீட்டில் நுழைந்ததில் இருந்தே பரபரப்பிற்கு எந்த பஞ்சமும் இல்லை, அதிக சண்டைகளும் நிகழ்ந்து வருகிறது.


அத்தோடு பிரதீப் வெளியேற்றப்பட்டதில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சி மீது மக்கள் பலரும் வெறுப்பை காட்டி வருகிறார்கள்.கடந்த வாரம் பிக்பாஸ் 7 வீட்டில் இருந்து ஐஷு வெளியேறியிருந்தார். வெளியேற்றப்பட்ட அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் தான் செய்தது தவறு என்னை மன்னத்து விடுங்கள் என்றும் நேற்றைய தினம் பதிவொன்றினைப் போட்டிருந்தார்.


இந்த நிலையில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்று பார்த்தால் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் கானா பாலா வெளியேறியுள்ளார்.இதனால் அவருடைய ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர்  பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு நாளைக்கு ரூ. 25 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டு உள்ளே சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement