தமிழ் சினிமாவில் இயக்குனராக காணப்படும் விக்னேஷ் சிவன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு உயிர், உலக் என இரண்டு மகன்கள் உள்ளார்கள்.
விக்னேஷ் சிவன் தற்போது பிரதீப் ரங்கநாதன் மற்றும் எஸ்.ஜே சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோரை வைத்து படம் ஒன்றை தயாரித்து வருகின்றார். இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டது.
சிம்பு நடித்த போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் விக்னேஷ் சிவன். அதில் சரத்குமார் மகள் வரலட்சுமி, நடிகை ஷோபனா என பெரிய ஸ்டார்களை வைத்து படத்தை உருவாக்கி இருந்தார். இந்த படம் கதை ரீதியாக சிறப்பாக அமைந்தது எனினும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இதைத்தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் நானும் ரவுடிதான் படத்தை இயக்கினார். அந்த படம் பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது. இதன் மூலம் அனைவரும் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனராக மாறினார் விக்னேஷ் சிவன்.
நானும் ரவுடிதான் படத்தில் தான் சிவனும், நயனும் காதலிக்க தொடங்கினார்கள். பல வருடங்கள் லிவிங் டு கெதரில் இருந்தவர்கள், கடந்த 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அதன் பிறகு வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தார் நயன்தாரா. தற்போது வரையில் இவர்களது குடும்ப வாழ்க்கை சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இன்றைய தினம் தனது தாயாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருவதோடு விக்னேஷ் சிவனின் குடும்பத்தை ரசிகர்கள் வியந்து பார்த்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!