• Apr 24 2026

ராதிகாவின் அசாத்திய நடிப்பிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி.. வசூல் எவ்வளவு தெரியுமா?

shali / 1 month ago

Advertisement

Listen News!

அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியாகி கவனம் பெற்ற திரைப்படம் தான் தாய் கிழவி. இந்த படத்தை முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும், கதையின் மையமாக ராதிகா சரத்குமார் நடித்திருப்பதும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது.


படம் வெளியானதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், கதையின் வலிமை மற்றும் ராதிகாவின் ஆழமான நடிப்பால் பாராட்டுகளை குவித்தது. குடும்ப உணர்வுகளையும், சமூக நுணுக்கங்களையும் இணைத்து சொல்லப்பட்ட இந்த படம், அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில், ‘தாய் கிழவி’ திரைப்படம் உலகளவில் ரூ.75 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. குறிப்பாக, பெண்மையை மையமாகக் கொண்டு உருவான ஒரு படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்திருப்பது முக்கியமான சாதனையாக பார்க்கப்படுகிறது.


அறிமுக இயக்குநராக இருந்தாலும், சிவகுமார் முருகேசன் தனது முதல் முயற்சியிலேயே பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார். அதேபோல், தயாரிப்பாளராக சிவகார்த்திகேயனுக்கும் இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

Advertisement

Advertisement