தமிழ் திரையுலகை கலக்கிக் கொண்டிருக்கும் ரீ-ரிலீஸ் ட்ரெண்டில், ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஒரு படம் நேற்றைய தினம் திரையரங்கில் மீண்டும் களமிறங்கி உள்ளது. சரண் இயக்கத்தில், அஜித் குமார் நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளியான அட்டகாசம், மறுபடியும் திரையரங்குகளைத் தேடி வந்துள்ளது.

அஜித் ரசிகர்களுக்கு இது ஒரு சிறப்பு. ஏனெனில் அட்டகாசம் திரைப்படம் வெளியான போது அவர் நடித்த வேடம், ஆக்சன் , பாடல்கள் எனப் பல அம்சங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. 20 ஆண்டுகளுக்கு பின் இந்தப் படம் மீண்டும் திரைக்கு வந்திருப்பது, ரசிகர்களுக்கு நினைவுகளைப் புதுப்பிக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
இந்த படத்தில், பூஜா கதாநாயகியாக, ரமேஷ் கண்ணா, இளவரசு போன்ற பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். சமீபகாலமாக பழைய ஹிட் படங்களை ரீ-ரிலீஸ் செய்யும் கலாச்சாரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்நிலையில், அட்டகாசம் ரீ-ரிலீஸுக்கும் அஜித் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கினார்கள்.
இந்நிலையில், இப்படம் தற்பொழுது ரீ- ரிலீஸில் 50 லட்சத்திற்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அஜித் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!