• Dec 02 2025

‘காட்டாளன்’ படத்தில் சர்ப்ரைஸ்… தமிழ் நடிகையை மலையாளத்துக்கு இழுத்த இயக்குநர்.!

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

மலையாள சினிமா தற்போது சிறப்பான கதை சொல்லும் திறமையால் வளர்ந்து கொண்டே செல்கிறது. இப்படியே பல மொழி நடிகர்களையும், தொழில்நுட்ப நிபுணர்களையும் மலையாள படங்களுக்குள் இழுத்துவரும் ஒரு பெரிய மாற்றம் நிலவுகிறது. இந்த மாற்றத்திற்கான சிறந்த உதாரணமாக ‘காட்டாளன்’ திரைப்படம் தற்போது பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.


‘மார்கோ’ படத்தின் வெற்றியால் புகழ்பெற்ற தயாரிப்பாளர் ஷரீப் முஹமது, தற்போது ‘காட்டாளன்’ என்ற புதிய படத்தைத் தயாரித்து வருகிறார். இந்த படத்தை திறமையான இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்குகிறார். மலையாள திரையுலகில் தனக்கென ஒரு வலுவான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வரும் ஆண்டனி வர்கீஸ் இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார்.

‘காட்டாளன்’ திரைப்படத்தில் பல திறமையான நடிகர்கள் இணைந்துள்ளனர். கலைநயம் மிகுந்த கதாநாயகியாக அறியப்படும் ரஜிஷா விஜயன், இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். அதேபோல், பல  முக்கிய நடிகர்களும் இப்படத்தில் இணைந்துள்ளனர். 


இந்நிலையில், இப்படத்தில் நடிகை துஷாரா விஜயன் இப்படத்தில் இணைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவே துஷாராவிற்கு மலையாளத்தில் நடிப்பதற்குக் கிடைத்த முதலாவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement