மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் உருவாகி, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'எம்புரான்' படம் வெளியான 48 மணி நேரத்திலேயே ரூ.100 கோடி வசூலைப் பெற்று ரசிகர்களையும், திரையுலகத்தையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
‘லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள ‘எம்புரான்’, பிரித்விராஜ் இயக்கத்தில் சமீபத்தில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. முதல் பாகம் வெளியாகிய நேரத்திலிருந்து இந்த தொடர்ச்சிப் படத்தின் மீது மலையாள ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி ரசிகர்களும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
படம் வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ரூ.48.5 கோடி வசூலை பெற்று, மோகன்லால் படங்களுள் மிக வேகமாக வசூல் செய்த படமாக இடம் பிடித்தது. இரண்டாவது நாளில் கூடுதலாக 51.7 கோடி வசூல் பெற்று மொத்தமாக 48 மணி நேரத்திற்குள் 100 கோடி வசூலைத் தாண்டியுள்ளது.
இந்த சாதனை, மலையாள திரைப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் சாதனை ஆகும். மேலும் இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் படம் விரைவாக திரையிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலும் மோகன்லாலின் ரசிகர்கள் அதிகளவில் இப்படத்தினைப் பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Listen News!