• Apr 01 2025

வெளியானது கேசரி 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..! –கொண்டாட ரெடியாகும் ரசிகர்கள்!

subiththira / 3 days ago

Advertisement

Listen News!

கரன் சிங் தியாகி இயக்கத்தில், அக்சய் குமார் மற்றும் மாதவன் இணைந்து நடித்துள்ள 'கேசரி 2'  படம், இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர்களில் ஒருவரான சி. சங்கரன் நாயரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இவரது வீரம் மற்றும் நீதிக்காக அவர் மேற்கொண்ட போராட்டம் என்பவற்றைப் படம் முழுவதும் விவரிக்கின்ற வகையில் காணப்படுகின்றது. 1919ல் நடந்த ஜாலியன் வாலா பாக் படுகொலையின் பின்னணி மற்றும் அதன்போது நீதியை நிலைநாட்டுவதற்காக சி. சங்கரன் நாயர் மேற்கொண்ட சட்டப் போராட்டம் என்பன இப்படத்தின் முக்கிய கருவாகும்.


அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, அக்சய் குமார் இப்படத்தில் சி. சங்கரன் நாயர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் நடிப்புத்திறனும், இந்தக் கதையின் தாக்கமும் இணைந்து, ரசிகர்களை திரையரங்குகளில் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மற்றொரு முக்கிய வேடத்தில் ஆர். மாதவன் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் எந்தக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதனை படக்குழு ரகசியமாகவே வைத்துள்ளது. மேலும் இந்த படத்தில் முக்கியமான பெண் கதாபாத்திரமாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். வரலாற்று படங்களில் இடம் பெறுவது, இவருக்கு புதிய அனுபவமாக இருக்கும் என்பதால், ரசிகர்கள் இவரை திரையில் பார்ப்பதற்கு ஆவலுடன் உள்ளனர்.

இப்படம், 2025 ஏப்ரல் 18ம் திகதி உலகமெங்கும் வெளியாக உள்ளதென படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இப்படம் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாவதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.




Advertisement

Advertisement