• Mar 31 2025

இதற்குத் தானா உயிரோட இருக்கேன்...? பொலிஸிடம் மன்னிப்புக் கேட்ட அண்ணாமலை...!

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, பொலிஸ் ஸ்டேசனில நின்ற மனோஜ் என்னோட தம்பி யாருனு தெரியுமா என்று பொலிஸைப் பாத்துக் கேக்கிறார். மேலும் அவன் மட்டும் இங்க வந்தான் என்றா உங்கள அடிச்சுத் தூள் பண்ணிடுவான் என்று சொல்லுறார். அதைக் கேட்ட பொலிஸ் டேய் அங்காள போடா என்று சொல்லுறார். அதனை அடுத்து அண்ணாமலையும் முத்துவும் பொலிஸ் ஸ்டேசனுக்கு வந்து நிக்கிறார்கள். அங்க மனோஜைப் பாத்த அண்ணாமலை என்னடா சட்டை இல்லாம இருக்கிற என்று சொல்லிக் கேக்கிறார்.

மேலும் இந்த நிலமையிலயா நான் உன்னப் பாக்கணும் என்று சொல்லுறார். அதனைத் தொடர்ந்து பொலிஸிடம் போய் ஏன் சார் சட்டை இல்லாம இருக்க வச்சிருக்கீங்க என்று கேக்கிறார். மேலும் முத்து பொலிஸைப் பாத்து ஏன் மேல இருக்கிற கோபத்திலயோ அவனப் பிடிச்சுக் கொண்டு வந்திருக்கீங்க என்று கேக்கிறார். அதுக்கு பொலிஸ் அவன் உன்னோட அண்ணா என்றே எனக்கு இப்பதான் தெரியும் என்கிறார்.



அதைக் கேட்ட மனோஜ் நீ இன்னும் சாரி கேக்கலயா என்று கேக்கிறார். அதனை அடுத்து அண்ணாமலை பொலிஸிடம், சார் இவன் செய்தது தப்புத் தான் அதுக்காக நான் உங்களிட மன்னிப்புக் கேக்கிறேன் என்கிறார். மேலும் இதையெல்லாம் பாக்குறதுக்கா நான் இன்னும் உயிரோட இருக்கேன் என்று கேக்கிறார்.அதைக் கேட்ட பொலிஸ் பசங்கள பெத்தா மட்டும் பத்தாது ஒழுங்கா வழக்கனும் என்று சொல்லுறார்.

அதைக் கேட்ட முத்து இந்த அட்வைஸ் ஒன்னும் தேவையில்ல என்று சொல்லுறார். இதனை அடுத்து அண்ணாமலை பொலிஸிடம் வந்து கதைத்து மனோஜ வீட்ட கூட்டிக் கொண்டு போறார். பின் அண்ணாமலை மீனாவப் பாத்து நான் தான் ஒழுங்கா வழக்கலயோ என்று கேக்கிறார். இதைக் கேட்ட மீனா பாட்டி வந்தா தான் எல்லாம் சரியாகும் என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement