• Apr 26 2024

'வாரிசு' படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த ஜெயசுதா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அண்மையில் வெளியான 'வாரிசு' படத்தில், தளபதி விஜய்க்கு அம்மா வேடத்தில் நடித்த ஜெயசுதாவின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி திரையுலகினரை வியப்பில்  ஆழத்தியுள்ளது.`

மேலும் விஜயின் திரைப்படங்களில்  அதிக வசூல் சாதனை நிகழ்த்திய திரைப்படமாக இருந்த 'பிகில்' படத்தின் வசூலை, இப்படம் முறியடித்து விட்டதாகவும் ரசிகர்கள் கொண்டாடினர்.

இது ஒருபுறம் இருக்க, விஜய்க்கு அம்மாவாக நடித்த நடிகை ஜெயசுதாவின் சம்பளம் குறித்த தகவல்தான் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

பொதுவாக வளர்ந்து வரும் ஹீரோயின்களுக்கே  சம்பளமாக 10 முதல் 20 லட்சம் வரை கொடுக்கப்படுவது வழக்கம். துணை நடிகர், நடிகையாக நடிப்பவர்களுக்கு அதைவிட குறைவாகவே கொடுக்கப்படுகிறது.

ஆனால் 'வாரிசு' படத்தில் விஜய்யின் அம்மா வேடத்தில் நடித்த நடிகை ஜெயசுதாவிற்கு சுமார் 30 லட்சம் சம்பளம் கொடுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் திரையுலகை சேர்ந்தவர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

இப்படம் வெளியாகி இதுவரை 310 கோடி வசூலை வாரி குவித்துள்ளதாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். தமிழில் மட்டுமின்றி, தெலுங்கிலும் 'வாரசூடு' என்ற பெயரில் வெளியான இப்படத்திற்கு, நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement