• Apr 01 2023

திருமணத்திற்கு முதல் ஹார்மோன் ஊசி எடுத்தீங்களா?- மன அழுத்தத்தில் இருந்த ஹன்சிகா- அவரது தயார் கூறிய முக்கிய விடயம்

stella / 1 month ago

Advertisement

Listen News!

நடிகை ஹன்சிகாவுக்கு கடந்தாண்டு டிசம்பர் 4-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இவர் தனது நீண்ட நாள் காதலனான சோஹைல் கதூரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முண்டோட்டா என்கிற 400 ஆண்டுகள் ப்ழமைவாய்ந்த அரண்மனையில் கோலாகலமாக நடைபெற்றது.

 இவர்களது திருமண வீடியோவை லவ் ஷாதி டிராமா என்கிற பெயரில் டாக்குமெண்ட்ரியாக கடந்த 10ம் திகதி வெளியானது.இதில் ஹன்சிகாவும் அவரது தாயும் தங்கள் கடந்த காலத்தில் நடந்த பிரச்சனைகளை பற்றியும், அதை சமாளிக்க அவர்கள் எடுத்த முன்னெடுப்புகளை பற்றியும் முதல் எபிஷோட்டில் கூறியிருந்தனர்.


 திருமணத்திற்கு முன்னதாக, ஏற்கனவே மன அழுத்தத்தில் இருக்கும் ஹன்சிகாவை மீட்டெடுக்க அவரது தாய் ஆறுதல் கூறுவதை முதல் எபிஷோட்டில் பார்க்கலாம். சோஹேல் உடைய கடந்த காலம் தொடர்பான செய்திகளால்  ஹன்சிகா பாதிக்கப்பட்டுள்ளாரா?  என்று ஹன்சிகாவின் தாயார், ஹன்சிகாவிடம்  கேட்கும்போது,  தனக்கு அப்படியொன்றும் பெரிதாக  கவலைகள் இல்லை என்று ஹன்சிகா கூறுகிறார். முன்பு அந்த வருத்தம் இருந்ததாகவும், இப்போது அது தொந்தரவு செய்யவில்லை என்றும் கூறுகிறார்.

சிறு வயதிலயே ஹார்மோன் ஊசி எடுத்து கொண்டதாக வந்த செய்தி உங்களை வருத்தமடைய செய்ததா? என்று ஹன்சிகாவிடம் கேட்டதற்கு, “என்னால் சாதாரண ஊசிகளையே கூட எடுக்க முடியாது” என்று பதிலளிக்கிறார்.  மேலும் அவரது தாயார் இது பற்றி கூறுகையில்  “நாங்கள் பஞ்சாபி மக்கள், எங்கள் குழந்தைகள் 12-16 வயதிலேயே பெரிதாக வளர்ந்து விடுவார்கள்”  என்று கூறுகிறார்.


இப்படி எபிசோட் அடுத்த கட்டத்தை எட்டும் போது, மணமகனும், மணமகளும் சேர்ந்து ஜெய்ப்பூருக்கு வந்து திருமணத்திற்குத் தயாராவதை அதில் காணலாம். போலோ போட்டிக்குப் பிறகு, தனது மெஹந்தி நாளில் டெர்பி நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற ஆசை ஹன்சிகாவிற்கு வருகிறது. இது வழக்கத்திற்கு மாறானதாகத் தோன்றினாலும், அவரது தாயும், திருமணத்தை திட்டமிடுபவரும் அவருடன் நெடுநேரம்  இதை பற்றி விவாதிப்பதையும் அதில் காணலாம். தனது திருமணத்தில் டெர்பியை நடத்த வேண்டும் என்ற ஹன்சிகாவின் இயல்பிற்கு மாறான கோரிக்கைகள் நிறைவேறுமா? என்பதெல்லாம் அடுத்த எபிசோடில் ஒளிபரப்பாகவுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement